திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை தெருவில் இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் குடிசை தொழிற்சாலைகள் நிறைந்த இந்தப் பகுதியில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மதுபான கடைகளை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று(அக்.05) காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளையும் இழுத்து மூட வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக ஏர்போர்ட் பகுதி அவைத்தலைவர் சேகர், கட்சியினர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:
'முதலமைச்சர் வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்' - அதிமுக எம்.எல்.ஏ