திருச்சி: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இன்று (பிப். 4) வேட்பு மனுதாக்கல் முடிவடைந்த நிலையில், திருச்சி மாநகராட்சி தேர்தலில் 40ஆவது வார்டு திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.சேகரன், போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார்.
இவருக்கு பதிலாக, அவரது மகன் சிவா, திமுக வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
இதையும் படிங்க: 'இலவு காத்த கிளி யார்?'-ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் மசோதாக்கள்