ETV Bharat / state

அமைப்புசாரா கட்டடத் தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி: முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்கள் - அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி

திருச்சி: கட்டடத் தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி முகாமை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

corona vaccine camp
corona vaccine camp
author img

By

Published : Aug 6, 2021, 3:35 PM IST

தமிழ்நாடு அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி அப்பல்லோ குழுமத்தின் தலைவர் மருத்துவர் பிரதாப் ரெட்டியால் அனைத்து அப்போலோ மருத்துவமனைகளும் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்துடன் இணைந்து 2 லட்சம் அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களுக்கு கோவிட் தடுப்பூசியானது தமிழ்நாடு முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த அமைச்சர்கள்

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து திருச்சி அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை, டெல்டா மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களான 30 ஆயிரம் பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியை, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, தொழிலாளர் துறை கூடுதல் ஆணையர் பாலசுப்ரமணியன் உடன் இருந்தனர்.

அப்போலோ மருத்துவமனை சார்பில் அப்போலோ குழுமத்தின் முதுநிலை தலைமை மருத்துவ அலுவலர், அப்பல்லோ குழுமத்தில் கோவிட் தடுப்பூசிக்கான நடவடிக்கைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி

இது தொடர்பாக மருத்துவர் ரோகினி ஸ்ரீதர் கூறுகையில், இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலார்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதாக கூறினார்.

திருச்சி மருத்துவமனை தலைவர் சாமுவேல், விற்பனைப் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன், நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் சிவம், மருத்துவமனை துணை பொது மேலாளர் சங்கீத் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஸ்புட்னிக் வி விநியோகம் பிரச்னை: விரைவில் சரியாகிவிடும் எனத் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.