தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது நாளாக தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 5) மட்டும் ஒரே நாளில் 86 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 972 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 483 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 485 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் நான்கு பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.