ETV Bharat / state

திருச்சியில் சிறுமி கொலை - நெருங்கிய நபர்களிடம் தீவிர விசாரணை! - திருச்சியில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி

திருச்சி: சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடன் பழகி வந்த சில நபர்களிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சியில் சிறுமி கொலை
திருச்சியில் சிறுமி கொலை
author img

By

Published : Jul 8, 2020, 9:18 PM IST

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதி முள்ளிகரும்பூர். இந்த பகுதியில் இருந்து பாளையம் கிராமம் செல்வதற்காக ஒரு சாலை உள்ளது.

அந்த சாலையில் மர அறுவை மில் சுற்றுச்சுவர் அருகே 14 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் (ஜூலை 6) சந்தேகத்திற்கிடமான முறையில் எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

தகவலறிந்த சோமரசம்பேட்டை காவல் துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம், திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் ஆனி விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் அச்சிறுமி அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் கங்காதேவி (14) என்பதும், எட்டரை கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் உடற்கூறு அறிக்கையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியானது. ஆனால், அவர் தலையின் பின்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, சிறுமியுடன் சில நபர்கள் பழகி வந்ததாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆகவே, அவர்களிடம் தற்போது தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மாயமான இளைஞர் சடலமாக மீட்பு - கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.