உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும், மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறவும் தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, கரோனா அச்சுறுத்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகின்றன.
அதன் ஒருபகுதியாக, மாநிலம் முழுவதும் ஓவியக் கலைஞர்கள் முக்கிய சாலைகளில் மக்களை கவரும் வண்ணம் கரோனா குறித்த வாசகங்கள், ஓவியங்கள் வரைந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். அந்தவகையில், திருச்சி மாவட்டத்திலுள்ள ஓவியக் கலைஞர்கள் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஓவியம் வரைந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறை