ETV Bharat / state

அம்மா விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்த அமைச்சர்கள் - இளைஞர் விளையாட்டு மைதானம் திறப்பு திருச்சி

திருச்சி: நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்துவைத்தனர்.

playground
playground
author img

By

Published : Jan 14, 2020, 11:12 PM IST

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் மைதானத்தை திறந்துவைத்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர். விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில், “இளைஞர்கள் இடையே தலைமைப் பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடையே கூட்டு மனப்பான்மையை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டு திறன்மிக்க இளைஞர்களைக் கண்டறிந்து முறையான பயிற்சி கொடுத்து உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்” என்றார்.

அம்மா விளையாட்டு மைதானத்தை அமைச்சர்கள் திறந்துவைப்பு

தொடர்ந்து அமைச்சர் வளர்மதி பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள், 528 பேரூராட்சிகளில் ரூ.64.35 கோடி மதிப்பீட்டில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளன.

மைதானங்களில் தினந்தோறும் பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி கருவிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன“ என்றார்.

இதையும் படிங்க: அரசு குழந்தைகள் இல்லத்தில் விளையாட்டுப்போட்டிகள் - வென்றவர்களுக்குப் பரிசளிப்பு

Intro:திருச்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.Body:திருச்சி:
திருச்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், நாச்சிக்குறிச்சி ஊராட்சியில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதான திறப்பு விழா இன்று நடந்தது. மைதானத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்து வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார்.

விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசுகையில்,
இளைஞர்கள் இடையே தலைமை பண்பினை வளர்த்தல், கிராம இளைஞர்களிடையே கூட்டு மனப்பான்மையை உருவாக்குதல், கிராமங்களில் உள்ள விளையாட்டு திறன்மிக்க இளைஞர்களை கண்டறிந்து முறையான பயிற்சி கொடுத்து உயர்மட்ட போட்டிகளில் சாதனை படைக்க வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும் என்றார்.
அமைச்சர் வளர்மதி பேசுகையில்,

தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ.64.35 கோடி மதிப்பீட்டில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் அம்மா இளைஞர் விளையாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளன.
கபடி, பூ பந்து, வாலிபால், கிரிக்கெட் போன்ற 4 விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றுள்ளன. கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அமைக்கப்படுகின்ற மைதானங்களில் தினந்தோறும் பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்படுகின்றன.
         ஊராட்சி ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பெறும் ஆண்,பெண் அணிகளுக்கும் வெற்றி கோப்பையுடன் பரிசுகள் வழங்கப்படும். ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற அணிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு வெற்றி கோப்பையுடன் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.