இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, இலங்கையைச் சேர்ந்த சவரிமுத்து ஆண்டனி செபாஸ்டின் என்ற பயணி தனது உடலில் மறைத்து வைத்திருந்த 464 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 14.8 லட்சம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.