திருச்சி மாவட்ட ஆவின் சேர்மன் பதவி கலைக்கப்பட்டு அந்த பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் நடைபெறுகிறது. இந்நிலையில், அமைச்சர் எஸ். வளர்மதி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை இந்தப் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் வழங்காமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கனவே சேர்மனாக இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவரை இந்தப் பதவிக்கு அமைச்சர் வளர்மதி பரிந்துரை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி உறையூரில் உள்ள வளர்மதியின் வீட்டை குறிப்பிட்ட அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த அமைச்சர் வளர்மதி போராட்டம் நடத்தியவர்களிடம் கலைந்துச் செல்லும்படி கூறியுள்ளார். தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்திக்கும் என போராட்டம் நடத்தியவர்கள் கூறினர். மேலும் அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.37 லட்சம் மோசடி!