ETV Bharat / state

திருச்சியில் இன்று ஒரே நாளில் 46 பேருக்கு கரோனா தொற்று

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் இன்று (ஜூன் 28) ஒரே நாளில் 46 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி
திருச்சி
author img

By

Published : Jun 28, 2020, 8:06 PM IST

கரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று (ஜூன் 27) வரை 75 ஆயிரத்து 261 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று (ஜூன் 28) ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 940 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 1,443 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 537ஆக உயர்ந்துள்ளது. தற்போது, தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 636 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 1,079 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே, திருச்சியில் நேற்று வரை 500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று 46 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 546ஆக அதிகரித்துள்ளது. இதில், 199 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 343 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.