ETV Bharat / state

கரோனா கால சிறப்பு ரயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு! - திருச்சி எஸ்ஆர்எம்யூ கூட்டம்

திருச்சி: கரோனா கால சிறப்பு ரயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க, எஸ்ஆர்எம்யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

எஸ்ஆர்எம்யூ தலைவர் ராஜா ஸ்ரீதர்
கரோனா கால சிறப்பு ரயில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு
author img

By

Published : Feb 28, 2021, 8:58 AM IST

எஸ்ஆர்எம்யூ திருச்சி, பொன்மலை கோட்ட செயல் வீரர்கள் கூட்டம், திருச்சி சந்திப்பில் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் (பிப். 26) நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாவன:

  • ரயில்வேயை முழுமையாகத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கைவிட வேண்டும்,
  • ஏழு லட்சம் ரயில்வே தொழிலாளர்களை 2023ஆம் ஆண்டுக்குள் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தைக் கைவிட வேண்டும்,
  • 50 வயது நிறைவு அல்லது 33 ஆண்டு பணிநிறைவு என்ற அடிப்படையில் மோசமான சேவைப்பதிவு என்று கூறி வெளியேற்ற நினைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்,
  • குரூப் ஏ பிரிவு அனைத்து அலுவலர்களையும் ஒரே பிரிவில் இணைத்து இயக்குநர் என்ற பெயரின்கீழ் பணிபுரியவைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்,
  • சிறப்பு ரயில் என்ற பெயரில் கட்டண உயர்வும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டணச் சலுகை 40 விழுக்காடு, 50 விழுக்காடு தொடர வேண்டும்,
  • ரயில் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்தி ஏழை மக்கள் மற்றும் வர்த்தகர்களின் வயிற்றில் அடிக்க நினைப்பதை நிறுத்த வேண்டும்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ராஜா ஸ்ரீதர் கூறுகையில்,

“கரோனா காலகட்டத்தில் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நேரத்திலும், சரக்கு ரயிலை ரயில்வே தொழிலாளர்கள் இயக்கினர். தற்போதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.

15 நாள்களுக்கு முன்பாக ரயில்வே தொழிலாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளோம். உடனடியாக ரயில்வே நிர்வாகம் அதனை நிறைவேற்றித் தரும்படியும், வழக்கமான ரயில்களின் கட்டணத்தை கரோனா காலகட்டத்தில் சிறப்பு ரயில்கள் என்று கூறி பயணச்சீட்டு விலையை உயர்த்திவைத்துள்ளனர்.

உலக வங்கி மூலம் சரக்கு தண்டவாள அமைப்பதற்கு கடன்பெற்று தற்போது நிதிநிலை அறிக்கையில் விற்கப் போவதாக அறிவித்துள்ளனர். சரக்கு ரயில், பயணிகள் ரயில் மூலம் வருமானம் அதிகம் என்பதால் தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது.

தொழிலாளர், மக்கள் விரோத அரசுக்கு எதிராக ரயில்வே தொழிற்சங்கத்தினர் வாக்களிப்போம். தொழிற்சங்கங்களை ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: குற்றம் பொறுத்தீஸ்வரர் கோயிலில் அலை கடலென பக்தர்கள் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.