ETV Bharat / state

60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி தன் உயிரை விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்!

திருச்சி: 60 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அரசுப் பேருந்து ஓட்டுநர், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Government bus driver Thirukumaran
author img

By

Published : Oct 25, 2019, 10:50 AM IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் திருக்குமரன். அரசுப் பேருந்து ஓட்டுநரான இவருக்கு, திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம்போல் பணிக்குச் சென்ற திருக்குமரன், பயணிகளை ஏற்றிக்கொண்டு மதியம் 3 மணியளவில் திருச்சி நோக்கி பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, சிறுமயங்குடி அருகே பேருந்து வந்தபோது ஓட்டுநர் திருக்குமரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் பேருந்தை சாமர்த்தியமாக ஓரம்கட்டி நிறுத்திவிட்டு, தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி நடத்துநர் நாகராஜிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.

உடனடியாக மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த லால்குடி போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்த நிலையில், பேருந்து சென்ற சாலையின் இருபுறமும் ஆற்றில் தண்ணீர் ஓடியுள்ளது. இந்நிலையில், ஓட்டுநர் திருக்குமரன் சாமர்த்தியமாக பேருந்தை ஓரங்கட்டி நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: நீலகிரியில் 30 பயணிகளுடன் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து!

Intro:திருச்சி அருகே 60 பயணிகளின் உயிரை காப்பாற்றி மாரடைப்பில் அரசு பேருந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:திருச்சி:
திருச்சி அருகே 60 பயணிகளின் உயிரை காப்பாற்றி மாரடைப்பில் அரசு பேருந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் திருக்குமரன். (47). அரசு பேருந்து டிரைவர். இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந் நிலையில் நேற்று வழக்கம்போல் மதியம் மணிக்கு திருக்குமரன் பணிக்குச் சென்றார். லால்குடி அருகே மாந்துறை அரசு போக்குவரத்து பணிமனையில் மதியம் 2 மணிக்கு திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து லால்குடி வழியாக திண்ணியம் வரை செல்லும் நகரப் பேருந்தை ஓட்டிக்கொண்டு திண்ணியம் சென்றார் இதில் கண்டக்டராக நாகராஜ் என்பவர் பணியாற்றினார். திண்ணியத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருச்சி நோக்கி பஸ்சை ஓட்டி சென்றார். பேருந்து சிறுமயங்குடி அருகே வந்தபோது டிரைவர் திருகுமரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் நிலைகுலைந்த அவர் பஸ்சை சாமர்த்தியமாக ஓரம்கட்டி நிறுத்தினார் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி கண்டக்டர் நாகராஜிடம் தண்ணீர் கேட்டுள்ளார். உடனடியாக மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள சிறுமயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர். மேலும் பேருந்து சென்ற சாலையில் இருபுறமும் ஆற்றில் தண்ணீர் ஓடியுள்ளது. இந்நிலையில் டிரைவர் திருக்குமரன் சாமர்த்தியமாக பேருந்தை ஓரங்கட்டி நிறுத்தி பயணிகளின் உயிரை காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.