ETV Bharat / state

கரோனா பாதிப்பு: திருச்சி மலைக் கிராமங்களுக்கு சீல்!

திருச்சிராப்பள்ளி: துறையூர் அருகே மலைவாழ் மக்களுக்கு கரோனா தொற்று பரவியதால், அந்தக் கிராமத்திற்குச் செல்ல தடை விதித்து சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மலைவாழ் மக்களுக்கு கரோனா : கிராமத்துக்கு சீல்!

author img

By

Published : May 30, 2021, 1:07 PM IST

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் அருகே உப்பிலியபுரம் பி.மேட்டூரை ஒட்டியுள்ள கிராமம் கல்லாத்துக் கோம்பை. இங்கு 50 மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

அண்மையில் உப்பிலியபுரம் சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர் மதுசூதனன் மேற்பார்வையில் முகாமிட்டு கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். இதில், 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுப்பப்பட்டனர். மற்ற 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதனால், புளியஞ்சோலை அடிவாரத்தில் உள்ள புகழ் பெற்ற மாசி பெரியண்ணசாமி கோயில் வளாகத்துக்குச் செல்லும் வழி மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர் கோபிநாத், சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நேரு தலைமையில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, இப்பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டது.

இதேபோன்று, உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சமலை, தென்புறநாடு ஊராட்சியில் உள்ள மலைக்கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக அந்தக் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : கரோனாவால் வீட்டில் தனிமை இருப்பவர்களிடம் தொலைப்பேசியில் உரையாடிய அமைச்சர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.