ETV Bharat / state

திருச்சியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பெண்கள் உயிரிழப்பு.. புத்தாண்டு நாளில் நிகழ்ந்த சோகம்! - புத்தாண்டு நாளில் சோகம்

Trichy House Collapse: திருச்சி அரியமங்கலம் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Four women including two girls died in the house roof collapsed near Ariyamangalam in Trichy
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 10:16 AM IST

Updated : Jan 1, 2024, 2:57 PM IST

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு

திருச்சி: திருச்சி அரியமங்கலம், கீழ அம்பிகாபுரம் பகுதியில் காந்தி தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என ஐந்து பேர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று(டிச.31) சென்னைக்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் படுத்து உறங்கி உள்ளனர்.

இந்த நிலையில், 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நள்ளிரவு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் உள்ள யாருக்கும் அதுகுறித்து தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மாடியில் இருந்து யதார்த்தமாகப் பார்த்துள்ளார். அப்பொழுது மாரிமுத்து வீட்டின் மேற்கூரை இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக வந்து பார்த்தபோது மாரிமுத்துவின் வீட்டின் மேற்கூரை இடிந்து கிடப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் உடனடியாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அரியமங்கலம் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டதோடு உடனடியாக திருச்சி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி தீயணைப்புத் துறையினர் ஈடுபாடுகளில் சிக்கி இறந்து கிடந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புத்தாண்டு பிறந்து உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அரியமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் சாலையில் நடந்து சென்ற இளைஞர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு.. சினிமா பாணியில் நடந்த கொடூர சம்பவம்!

Last Updated : Jan 1, 2024, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.