ETV Bharat / state

தரைமட்டமானது பழமை வாய்ந்த சிட்டி கிளப் கட்டிடம்..! - city club

திருச்சி: பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிட்டி கிளப் கட்டிடத்தை இடித்து, அதன் நிலத்தை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியது.

சிட்டி கிளப்
author img

By

Published : May 18, 2019, 3:10 PM IST

திருச்சி சிங்காரத்தோப்பு மேலபுலிவார்டு ரோடில் மாநகராட்சிக்கு சொந்தமான 3,889 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இடத்தை கடந்த 1905ம் ஆண்டு முதல் சிட்டி கிளப் என்ற பெயரில் பொழுதுபோக்கு மன்றம் செயல்பட்டு வந்தது. 85 ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்ட இந்த நிலத்தை சிட்டி கிளப் நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. 85ஆம் ஆண்டு கால குத்தகை 1989ஆம் ஆண்டு முடிவடைந்து. மேலும், இந்த சிட்டி கிளப் நிர்வாகத்திற்கு 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், 2013ஆம் ஆண்டில் இந்த நிலம் மாநகராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கு தேவைப்படுவதால் நீட்டிக்கப்பட்ட குத்தகையை ரத்து செய்யப்பட்டதாக மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மூன்று மாதங்களுக்குள் இடத்தைக் காலி செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. இந்த முடிவினை ஏற்க மறுத்த சிட்டி கிளப் நிர்வாகம், இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது.

தரைமட்டமாக்கப்பட்ட சிட்டி கிளப்

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந் மார்ச் 27ஆம் தேதி தள்ளுபடி செய்தது. மாநகராட்சி கொடுத்த கால அவகாச கெடு முடிந்தும் சிட்டி கிளப் நிர்வாகம் இடத்தை காலி செய்யாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளது. இதனால், இன்று காலை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சென்று சிட்டி கிளப் நிலத்தை கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக மாநகராட்சியின் வாகனங்கள், பொக்லைன் எந்திரங்கள், புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்டி கிளப் தலைவர் கேசவன், செயலாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர் மலர் செழியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதனிடையே, அங்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் சிட்டி கிளப் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

தரைமட்டமானது பழமை வாய்ந்த சிட்டி கிளப் கட்டிடம்..!

Intro:திருச்சியில் பாரம்பரியமிக்க சிட்டி கிளப் கட்டிடத்தை இடித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Body:திருச்சி:
திருச்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிட்டி கிளப் கட்டிடத்தை இடித்து நிலத்தை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது.
திருச்சி சிங்காரத்தோப்பு மேலபுலிவார்டு ரோடில் மாநகராட்சிக்கு சொந்தமான 3,889 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இடத்தை கடந்த 1905ம் ஆண்டு முதல் சிட்டி கிளப் என்ற பொழுதுபோக்கு மன்றம் செயல்பட்டு வந்தது.
85 ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்ட இந்த நிலத்தை சிட்டி கிளப் நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. இங்கு திருச்சி மாநகரின் முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு டென்னிஸ், பில்லியர்ட்ஸ், சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகள் மும்முரமாக நடந்து வரும். திருச்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பெரும்பாலானவர்கள் இந்த கிளப்புக்கு சென்று வருவது வழக்கம்.
85 ஆண்டு கால குத்தகை கடந்த 1989ஆம் ஆண்டு முடிவடைந்தது. அப்போது மேலும் இந்த சிட்டி கிளப் நிர்வாகத்திற்கு 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டில் இந்த நிலம் மாநகராட்சிக்கு தேவைப்பட்டதால் குத்தகையை ரத்து செய்யப்பட்டு மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூன்று மாதங்களுக்குள் இடத்தை காலி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து சிட்டி கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையில் இடத்தை காலி செய்ய கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல அடுக்கு வாகனம் நிறுத்தம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதோடு இங்கு வணிக வளத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சிட்டி கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த மார்ச் 27ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து இன்று இடத்தை காலி செய்வதற்கான நோட்டீசை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சிட்டி கிளப் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் இடத்தை காலி செய்யவில்லை. இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சென்று சிட்டி கிளப் நிலத்தை கைப்பற்றும் பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு கட்டடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மாநகராட்சியின் வாகனங்கள், பொக்லைன் எந்திரங்கள், புல்டோசர்கள் பயன்படுத்தப்பட்டது. முன்னதாக இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்டி கிளப் தலைவர் கேசவன், செயலாளர் வெங்கடாசலம், துணைத் தலைவர் மலர் செழியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு கட்டடங்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடத்தப்பட்டது. பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிட்டி கிளப் கட்டிடம் இன்று மாநகராட்சி நிர்வாகத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

Conclusion:சிட்டி கிளப்பை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.