ETV Bharat / state

வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

author img

By

Published : Jul 16, 2023, 1:43 PM IST

வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தக்காளி விலை குறைவாக இருக்கிறது எனவும், தக்காளி விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

minister
தக்காளி விலை
"வட மாநிலங்களை விட தமிழகத்தில் தக்காளி விலை குறைவு" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

திருச்சி: திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராம்ஜி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் ‘வேளாண் சங்கமம் 2023’ என்ற தலைப்பில் மாநில அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற உள்ளது. வருகிற 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், வேளாண் கண்காட்சி முன்னேற்பாடுகளை இன்று (ஜூலை 16) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், "வருகிற 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டு தொடக்கி வைக்க உள்ளார்.

'வேளாண் சங்கமம் 2023' என்ற தலைப்பிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் தமிழ்நாட்டில் முதல் முறையாக திருச்சியில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை, தொழில்துறை, மார்க்கெட்டிங், தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்று விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

விவசாயிகளுக்கு லாபத்தை தரக்கூடிய பயிற்சிகள் வழங்கப்பட இருக்கின்றன. வேளாண் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையின் சார்பாக பயிர் சம்பந்தமான அறிவுரைகளை வழங்க இருக்கிறார்கள். இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. பொறியியல் துறை சார்பில் விவசாய பெருமக்களுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவை வழங்கப்படும். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், எந்தெந்த பருவத்தில், எவ்வகை பயிரை பயிரிட வேண்டும் என்பது குறித்தும், பயிருக்கு சவாலாக இருக்கின்ற பூச்சிகளை அழிப்பது மற்றும் மாற்று பயிர் பயிரிடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் விளைப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பது போன்ற பயிற்சியும் இக்கண்காட்சியில் வழங்கப்படும்" என தெரிவித்தார்.

தக்காளி விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "காலநிலை உற்பத்திக்கு ஏற்ப தக்காளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். டெல்லி போன்ற வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தக்காளி விலை பரவாயில்லை. உழவர் சந்தை மூலமாகவும், கூட்டுறவுத் துறை மூலமாகவும் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது" என்றார். மேலும், தக்காளி விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: Tomato: கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை... மத்திய அரசு அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.