சுற்றுச்சூழல் ஆர்வலரும், மக்கள் நல போராளியுமான முகிலன் மாயமாகி சுமார் ஒரு மாத காலம் ஆகிறது. அவரை கண்டுபிடித்து கொடுக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைப்பெற்றுவருகிறது.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடித்து தரக்கோரியும், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் உரிய குற்றவாளிகளை கைது செய்ய கோரியும், மக்களைக் பாதுகாக்கத் தவறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டுடியும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கண்ணன், சமூக நீதிப் பேரவை ரவிக்குமார், மக்கள் பாதுகாப்பு மைய கமருதீன், கென்னடி, தமிழ் தேசிய பேரியக்க கவித்துவன், மக்கள் அதிகாரம் செழியன், ராஜா, மக்கள் கலை இலக்கியக் கழக ஜீவா, பெண்கள் முன்னேற்ற இயக்க அருள் ஆக்னஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.