திருச்சி: மலைக்கோட்டை நகரம் என்றழைக்கப்படும் திருச்சிக்கு வருகைபுரியும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சலித்துக்கொள்ளும் விஷயம் - என்னய்யா பெரிய திருச்சி மேலணை கல்லணைனு இரண்டு அணைக்கட்டு, ஆறு கோயில்கள் வேற என்னய்யா இருக்கு உங்க ஊருல என்பதுதான்!
அவ்வாறு கூறுபவர்களிடம் நாம் கூறுவது, தேடினால் கிடைக்கும்...
தேடல்கள் இருக்கும்வரை வாழ்க்கையில் சலிப்புத் தட்டாது. தேடுவது நின்றுவிட்டால் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுவிடும் இதுதாங்க உண்மை.
அப்படித் தேடிக் கண்டுபிடிப்பதில் வல்லவரான தங்கமணியிடம் பேசினோம்,

இயற்கை ஆராய்ச்சியாளரான அவர் சொல்வதைக் கேட்போமே!
2006இல் தொடங்கிய தேடல்

நீங்க சொல்றது சரிதாங்க தேடல் முக்கியம் 2006 முதல் தேடிக்கொண்டே இருக்கிறேன், அப்படி ஒரு தேடலில் கிடைத்ததுதான் இந்தக் கிள்ளியூர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் வருகிறது. கிள்ளியூருக்கு கல்லணையிலிருந்தும் கூத்தைபாருக்கு உய்யக்கொண்டான் ஆற்றுத்தண்ணியும் வருவதால் எப்பொழுதும் இந்தப் பகுதி செழித்துக் காணப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை அதாவது அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கே முகாமிடுகின்றன. அவை இடும் எச்சம் வயலுக்கு உரமாகிறது என்பது தெரியாமல் அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் எனச் சலித்துக்கொண்டதுடன், இந்த பகுதியைக் காணத் தரமான சாலை வசதி ஏற்படுத்திக்கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கோரிக்கையும் வைத்தார்.

பறவைகளைச் சுடும் கேமரா!
ஒவ்வொரு ஆண்டும் தங்கமணி தவறாமல் பறவைகளைச் சுடுவதற்கு இங்கே வந்துவிடுவாராம்... துப்பாக்கியால் அல்ல; தன்னுடைய கேமராவால்!
கிள்ளியூரைச் சேர்ந்த ரேகா கார்த்திகேயன் தம்பதி எதிரே கண்ணில்பட என்னங்க உங்க ஊருக்கு இவ்வளவு பறவைகள் வருகின்றனவே! எப்படி பார்க்கிறீங்க? என்று பேச்சைத் தொடங்கினோம்,
ஆமாங்க எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் சந்தோஷம் பீறிட ஆரம்பிச்சுடுங்க, எல்லா கவலையும் மறந்துடுங்க ஊர் மக்களுக்குப் புரிதல் இல்லைங்க, பறவைகள் இடும் எச்சம் எவ்வளவு நல்லதுனு தெரியலைங்க.

அதுசரி தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பீங்களா?
ஆமாங்க சொன்னா யாரு புரிஞ்சுக்கறாங்க! ஆனா அதுக பாட்டுக்கு எதைப் பத்தியும் கவலைப்படாமல் இருந்துட்டு போயிடுதுங்க.
மக்களின் எதிர்பார்ப்பு ஒரு வேடந்தாங்கல், பழவேற்காடு, கூந்தன்குளம் போலப் பறவைகள் சரணாலயம் அமைய வேண்டும் என்பதே!
இயற்கை ஆர்வலர் தங்கமணி

தங்கமணி நித்தியானந்தம் ஒரு (material scientist by profession) இயற்கை ஆர்வலர். 2006 லிருந்து தீவிரமான பறவை அவதானிப்பாளர், ஆர்வலர், பாதுகாப்பாளர்.
பறவைகள் தொடர்பான கட்டுரைகளைப் பூவுலகு, சுட்டி யானை போன்ற இதழ்களிலும், தமிழ் இந்து போன்ற நாளிதழ்களிலும் எழுதிவருபவர்.

இதையும் படிங்க:'நூறு வருஷம் வாழணுமா? இந்த ஏழு போதும்!'