திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குவளக்குடியில் கழிவு நீர் வாய்க்காலை தூர் வார வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், திருவெறும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொகுதி பொது நிதியிலிருந்து கழிவு நீர் வாய்க்காலை சுத்தப்படுத்தவும், தூர்வாரவும் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து, தூர்வாரும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக, தூர்வாரும் பணியை மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் திமுக செயற்குழு உறுப்பினர் சேகரன், ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, குவளக்குடி ஊராட்சி செயலாளர் குவளை பிரபாகரன், குவளக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அழகு செந்தில், ஒன்றியக் குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் அரசு செய்யவேண்டியது என்ன? - மு.க. ஸ்டாலின் ஆலோசனை