ETV Bharat / state

திருச்சியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் திருநாவுக்கரசர்! - திருநாவுக்கரசர்

திருச்சி: நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

காங்கிரஸ்
author img

By

Published : Mar 25, 2019, 7:48 PM IST

நெருங்கிவரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைவர்கள், அந்தந்த தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர், திருச்சி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான சிவராசு வேட்பு மனுவை பெற்றுக்கொண்டார். திருநாவுக்கரசருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் அன்பரசன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதில் முன்னாள் அமைச்சர் நேரு, மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தின் இதயம் போன்று திகழ்கின்ற திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடக் கூடிய வாய்ப்பை எனக்கு அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி ஏராளமான தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள ஒரு தொகுதி. நேரு, காமராஜர் காலத்திலிருந்து ரயில்வே தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, பிஎச்இஎல் போன்ற கனரக தொழிற்சாலைகளும், அதையொட்டி ஏராளமான சிறு தொழில்களும் இங்கு தொடங்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் ஒரு கோடி பேர் படித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக பெரிய, நடுத்தர, சிறிய தொழில்கள் தொடங்க முன்னுரிமை அளித்து, வேலைவாய்ப்பை போக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வேன்.

ஆறு சட்டமன்றத்தொகுதிகளையும் சேர்த்து திருச்சி நகரில் நாடாளுமன்ற தொகுதிக்கு அலுவலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். எனது குடியிருப்பு பகுதியாக இங்கேயே தங்கியிருந்து நாடாளுமன்றம் செல்வேன். மற்ற நாட்களில் தொகுதியில் மக்களுக்கான பணிகளில் ஈடுபடுவேன்" என்று வாக்குறுதி அளித்தார்.

Intro:திருச்சியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

Body:திருச்சி:
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று உள்ளன. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மதியம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவராசு வேட்பு மனுவை பெற்றுக்கொண்டார். வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர் நேரு, மாநகர செயலாளர் அன்பழகன், எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வந்தனர்.
திருநாவுக்கரசருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதன் பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் இதயம் போன்று திகழ்கின்ற திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட கூடிய வாய்ப்பை எனக்கு அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சோனியா காந்தி, காங்கிரசின் மூத்த தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலின், அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கு வாழ்த்துக்களோடு இன்று முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த தொகுதியில் வாழக்கூடிய மக்கள், குறிப்பாக வாக்காளர்களின் சேவகனாக, தொண்டனாக இருந்து இந்த தொகுதிக்கு பணியாற்றக் கூடிய வாய்ப்பை தரவேண்டும். கடந்த 2007-ம் ஆண்டு முதல் 6 முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக, மாநில, மத்திய அமைச்சராக, துணை சபாநாயகராக, எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பணியாற்றி உள்ளேன்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றி உள்ளேன். இந்த அனுபவத்தை கொண்டு எனக்கு தமிழகத்தில் இருக்கின்ற அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், மத்திய அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்களின் துணையோடு இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற நன்மைகளை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுடைய இன்ப, துன்பங்களில் பங்கெடுத்து என்னால் முடிந்த நன்மைகளை மக்களுக்கும், அந்த தொகுதிக்கும் தொடர்ந்து செய்து வந்துள்ளேன். இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களுக்கும் என்னால் இயன்ற நன்மைகளையும் செய்வேன் என உறுதி அளிக்கிறேன். திருச்சியில் ஏராளமான தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உள்ள ஒரு தொகுதி. நேரு, காமராஜர் காலத்தில் இருந்து ரயில்வே தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, பிஎச்இஎல் போன்ற கனரக தொழிற்சாலைகளும், அதை ஒட்டி ஏராளமான சிறு தொழில்களும் தொடங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் சிப்காட் நான் அமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்டது. அங்கே பல துறைகளில் தொழில் உருவாகியுள்ளன. மதுரை வழியாக செல்லும் சாலையில் ஏராளமான தொழிற்சாலை உள்ளன. மேலும் கூடுதலாக தொழில்கள் தொடங்க அடிப்படை வசதிகள் இங்கு உள்ளது ஏராளமான உள்ளது. இளைஞர்கள் ஒரு கோடி பேர் படித்துவிட்டு பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். இந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக பெரிய, நடுத்தர, சிறிய தொழில்கள் தொடங்க முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.இங்குள்ள சர்வதேச விமான நிலையம் மேலும் பெரிய விமான நிலையமாக உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. மக்களிடம் செல்லும்போது அவர்கள் கூறும் குறைகளை கேட்டறிந்து நாடாளுமன்ற தொகுதிக்கான வளர்ச்சி நிதியை ஊழல் இல்லாமல், முறைகேடு இல்லாமல் ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் பயன்படுத்தப்படும். மாநில, மத்திய அரசுகளை பயன்படுத்தி மக்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். 6 சட்டமன்ற தொகுதிக்கும் சேர்த்து திருச்சி நகரில் நாடாளுமன்ற தொகுதிக்கு அலுவலகம் அமைத்து, எனது குடியிருப்பு பகுதியாக இங்கேயே தங்கியிருந்து நாடாளுமன்றம் செல்வேன். மற்ற நாட்களில் தொகுதியில் தொகுதி மக்களுக்கான பணிகளில் ஈடுபடுவேன் என்றார்.

Conclusion:திருநாவுக்கரசருக்கு மாற்று வேட்பாளராக அவரது மகன் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.