ETV Bharat / state

'சசிகலா அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது'

author img

By

Published : Oct 16, 2021, 11:53 AM IST

சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. சசிகலா விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Vck thirumavalavan pressmeet  thirumavalavan  Vck  pressmeet  bjp  thirumavalavan criticize aiadmk  thirumavalavan criticize aiadmk to keep alliance with bjp  trichy news  trichy latest news  திருச்சி செய்திகள்  அண்மை செய்திகள்  திருமாவளவன்  விசிக திருமாவளவன்  அதிமுகவை விமர்சித்த திருமாவளவன்
திருமாவளவன்

திருச்சி: மன்னார்புரத்தில் உள்ள கிராண்ட் ஹோட்டலில் நேற்று (அக்டோபர் 15) திருமாவளவன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. அதில் விசிக 43 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், நான்கு மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்குப் போட்டியிட்டது.

இதில் 27 ஒன்றிய கவுன்சிலர், மூன்று மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளோம். இது அனைத்துத் தரப்பு மக்களும் விசிகவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.

பாஜகவும், சங்பரிவார் இயக்கங்களும் சமூக நீதிக்கு எதிராக வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செயல்பட்டுவருகின்றன. பாஜக ஒருபுறம் சமூக நீதியை ஆதரிப்பது போலவும், மறுபக்கம் அதற்குச் சவக்குழி தோண்டும் வேலையையும் செய்துவருகிறது. இது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.

ஆணவப் படுகொலை

2024ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்வதைத் தடுக்க இந்திய அளவில் ஜனநாயகச் சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தேவை இருக்கிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பிரபாகரன் என்கிற இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எந்தக் கட்சியினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் அதிகமாக நடந்துவருகின்றன.

வட மாநிலத்தைவிட தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலைகள் குறைவாக இருக்கும். ஆனால் தற்போது அதிகரித்துவருவது கவலையளிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை அவசர சட்டமாக இயற்ற வேண்டும். விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாகப் பார்க்க முடியாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் அதை வரவேற்போம். தமிழ்நாட்டில் அதிகம் கவனிக்கக்கூடிய வெற்றியாக திமுக கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது.

அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்

அதிமுகவிற்கு வலிமையான தலைமை அமையவில்லை. பாஜகவைச் சார்ந்து இயங்கும் வரையில் அதிமுகவிற்கு இந்தச் சரிவு தொடரும். அதிமுகவினரால் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்களைக் கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதிமுகவில் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இருந்த கட்டுக்கோப்பு தற்போது இல்லை.

அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டேன் என அறிவித்துவிட்டு மீண்டும் சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. சசிகலா விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது. தலைவர்களின் நினைவிடங்களுக்கு சசிகலா செல்ல அனுமதி கேட்டுள்ளார். அவருக்கு அதற்கு உரிமை இருக்கிறது. அவரை யாரும் தடுக்க முடியாது. அவருக்கு அனுமதி வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் தனியார் எண்ணெய் நிறுவனங்களிடம் இருக்கிறது. இந்த அதிகாரத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான அரசாக பாஜக அரசு இருக்கிறது.

நீட் விவகாரம்

நீட் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பிற மாநில முதலமைச்சர்களின் ஆதரவைத் திரட்டுவது பாராட்டத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரிடம் கையெழுத்துப் பெற்றுத்தர வேண்டியது பாஜக அரசின் கடமை.

நீட் தேர்வை ரத்துசெய்யும் விவகாரத்தில் சட்ட ரீதியான தீர்வை திமுக கொண்டுவரும் என நம்புகிறோம். என்கவுன்ட்டர், மரண தண்டனை கூடாது என்பதுதான் விசிகவின் நிலைப்பாடு. சட்ட ரீதியாக தண்டனை வழங்குவதுதான் சரியான நடைமுறை.

காந்தியின் மிக முக்கியமான கோரிக்கைகளின் ஒன்று மது விலக்கு. திமுக அதை நடைமுறைப்படுத்த வேண்டும். மது விலக்கு கொள்கையை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆளும் பாஜக அரசு அதற்கான சட்டத்தை கொண்டுவர வேண்டும்” என்றார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அருள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: அண்ணன் அழகிரியை நினைவுகூர்ந்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.