ETV Bharat / state

முகமூடியாய் மாறிய குப்பைக் கூடை - கொள்ளையர்களின் புதிய அவதாரம்!

திருச்சி: பெண்களுக்கான தையல் பயிற்சி மையத்தில் குப்பைக் கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளையர்கள் இருவர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் பெண்களுக்கான தையல் பயிற்சி மையத்தில் கொள்ளை
author img

By

Published : Oct 8, 2019, 6:33 PM IST

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்சி மாவட்டம் தாளக்குடியில் பெண்களுக்கான தையல், கணினி பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அங்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இருவர் அந்த மைய கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த தையல் இயந்திரங்கள், கைப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டனர்.

குப்பைக் கூடையை முகமூடியாக பயன்படுத்திய கொள்ளையர்கள்

பின்னர் வாசலில் வைக்கப்பட்டிருந்த குப்பைக் கூடையை முகமூடியாக தலையில் மாட்டிக்கொண்டு கொள்ளையர்கள் மீண்டும் உள்ளே நுழைந்து அங்கிருந்த ரூ.5000 பணத்தை மட்டும் திருடிச் சென்றனர்.

இது குறித்து பயிற்சி மைய நிர்வாகி ராஜேந்திரன் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையர்கள் மிருக முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் நடந்தேறிய சில நாட்களில் அதே மாவட்டத்தில் குப்பைக்கூடையை முகமூடியாக அணிந்து கொள்ளையடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க:

சமைத்து சாப்பிட்டு சாவகாசமாகத் திருடிய திருடர்கள்!

Intro:குப்பைக் கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளைடித்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Body:திருச்சி:

குப்பைக் கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளைடித்த சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடை சுவற்றை ஓட்டை போட்டு ரூ.13 கோடி மதிப்பிலான தங்கம், பிளாட்டினம், வைரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தில் கொள்ளையர் மிருக முகமூடி அணிந்து கொள்ளையில் ஈடுபட்டது சிசிடிவி காட்சி பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சியில் இருந்து திருச்சி மக்கள் மீழ்வதற்குள் அடுத்து குப்பை கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பெண்களுக்கான தையல் மற்றும் கம்யூட்டர் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அங்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள் தையல் பயிற்சி பெற்று வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு அந்த மைய கதவின் தாழ்பாளை உடைத்துக்கொண்டு 2 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களது முகம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் தெளிவாக பதிவானது.
பின்னர் அங்கிருந்த தையல் இயந்திரங்களையும், செல்போன், லேப்டாப், கம்பியூட்டர் உள்ளிட்ட பொருள்களையும் கொள்ளையர்கள் நோட்டமிட்டது கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. கண்காணிப்புக் கேமரா இருப்பதை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து வாசலில் வைக்கப்பட்டிருந்த குப்பை கூடையை முகமூடியாக தலையில் மாட்டிக்கொண்டு கொள்ளையர்கள் மீண்டும் உள்ளே நுழைந்தனர். தொழில் பயிற்சி மையத்தில் இருந்த எந்தப் பொருளையும் சேதப்படுத்தாமல், அங்கிருந்த ரூ.5000 பணத்தை மட்டும் திருடிச் சென்றனர். இது குறித்து பயிற்சி மைய நிர்வாகி ராஜேந்திரன் நெம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்Conclusion: கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.