திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா பரவல் தடுப்பு நடிவடிக்கைகளாக, சாலைகளில் கிருமிநாசினி தெளித்தல், வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அதையடுத்து ஆட்சியரின் உத்தரவின் பேரில், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் உள்ளவர்களுக்கு எந்தெந்த நாள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வெளியில் வரவேண்டும் என 6 விதமான துண்டுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன. அதனைப் பின்பற்றி மக்கள் வெளியில் வரவேண்டும் என அறிவுறுப்பட்டது.
இந்த நிலையில் அவற்றைப் பயன்படுத்தி காய்கறி சந்தைகளுக்கு செல்லும் பொதுமக்கள் சமூக விலகலைப் பின்பற்றாமல் வழக்கம்போல் வந்து செல்கின்றனர். அதற்கு காரணம் காய்கறி சந்தைகளின் முன்பகுதியில் காவல்துறையினர் யாரும் பாதுகாப்பு இல்லாததுதான் என்று தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கரோனா தடுப்பில் நகராட்சிக்கு காவல்துறையினர் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விலகி இருக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்