திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனித சங்கலி போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீதர், சங்க மாநில செயலாளர் ஜீவா, மாநில துணை செயலாளர் புஷ்பநாதன், மாநகர் மாவட்ட செயலாளர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது சங்க மாநில செயலாளர் ஜீவா செய்தியாளர்களிடம் கூறுகையில், "2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். நவம்பர் 25 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தின் முடிவில், மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே சட்டமாக்க வேண்டும். நவம்பர் 6 ஆம் தேதி அன்று திருச்சி மேற்கு தாசில்தார் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையின் முடிவுகளை அமல்படுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பாதைகேட்டு சடலத்துடன் திடீர் சாலைமறியல் !