திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா காமாட்சிபட்டியைச் சேர்ந்தவர், கூலித்தொழிலாளி சதீஷ்குமார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்தது.
கடந்த ஜன.3ஆம் தேதி மதியம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஜீவா, வீட்டில் விளக்கு ஏற்றுவதற்காக வைத்திருந்த மண்ணெண்ணெயை ஜூஸ் என நினைத்து தவறுதலாக குடித்துள்ளார்.
இதனையறிந்த தாய் சுகன்யா பதறியடித்துக்கொண்டு குழந்தையை உடனடியாக தண்டலை புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சையிலிருந்த சிறுவன் இன்று (ஜன.05) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த முசிறி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜீவ் காந்தி, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: பாம்பிடம் சிக்கிய கிளியை காப்பாற்றிய புத்திசாலி சிறுவன்!