ETV Bharat / state

திருச்சியில் பிரதமரை மேடையில் வைத்துகொண்டு ஸ்டாலின் செய்த சம்பவம்! - PM Modi

MK Stalin: இன்னார்தான் படிக்க வேண்டுமென்பதை மாற்றி, அனைவருக்கும் கல்வியை கொண்டு சேர்த்ததே திராவிட மாடல் ஆட்சியின் சமூக புரட்சி என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 2:13 PM IST

Updated : Jan 2, 2024, 2:35 PM IST

திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா உள்ளிட்டவைகளுக்காக பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். முதலில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பிரதமர் மோடி, சிறப்புரையாற்றினார்.

அவரைத்தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உயர் கல்வித்துறை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சியின் போது கல்விக்கு வகுத்த வழிகள்தான் இன்று உயர்கல்வி துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அவற்றை சிறிதும் மாற்றாமல் திராவிட மடல் ஆட்சி 'அனைவருக்கும் கல்வி' என்று சமூகப் புரட்சியை ஏற்படுத்தி அனைவரும் கல்வி பயில வேண்டும் என்று நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, எனது கனவு திட்டமான 'நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் கல்வியை மேம்படுத்துவதற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மூலம் மாணவர்கள் பெருமளவில் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம்; 1.40 பேருக்கு வேலைவாய்ப்பு: 29 லட்சம் மாணவ மாணவிகள், 32 ஆயிரம் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 7.5 இட ஒதுக்கீடு மூலம் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்விகள் வழங்கப்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 1.40 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது' என்று பெருமை சாட்டினார்.

சிறந்த மனிதர்களாக உயர வேண்டும்: மேலும் பேசிய அவர், 'இந்திய அளவில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சிறந்து விளங்கி கொண்டிருக்கிறது. மாணவ மாணவிகள் நன்றாக படித்து, நம் நாட்டின் எதிர்காலத்தில் தொழில் முனைவராகவும், சமுதாயத்திற்கும் பெற்றோர்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்ய வேண்டும். குறிப்பாக, சிறந்த மனிதர்களாக உயர வேண்டும். கல்வியை கற்பித்த ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழகளுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி, கல்லூரி கல்வி, ஆராய்ச்சி கல்வி கிடைப்பதை உறுதி செய்வதே திராவிட மாடல் ஆட்சியாகும். மாணவ மாணவிகள் உயர்கல்வியில் மட்டுமல்ல; இந்த சமுதாயத்திலும் சிறந்து உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அதே சமயம் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்' என வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?

Last Updated : Jan 2, 2024, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.