ஆழ்த்துளைக் கிணற்றில் 88அடி ஆழத்திலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்திற்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. உடற்கூறாய்வு நடைபெற்ற மருத்துவமனைக்கு வெளியே 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
உடற்கூறாய்வு முடிந்த நிலையில் சுஜித்தின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சுஜித்தின் உடல் சவப்பெட்டியில் வைத்து நடுக்காட்டுப்பட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டவிருக்கிறது. இதுகுறித்து ஆட்சியர் பேசுகையில், சுஜித் விழுந்த ஆழ்த்துளைக் கிணறும் அதற்குப் பக்கத்தில் சுஜித்தை மீட்பதற்காக தோண்டப்பட்ட குழியும் கான்கீரிட் மூலம் மூடப்படும்.
மேலும், சுஜித் உயிரிழந்தது எப்போது என்பது உடற்கூறாய்வு முடிவுகளில் தெரியவரும் என்றார்.