ETV Bharat / state

கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் அடிக்கடி நிகழும் உடைப்பு - நீர் வீணாகும் அவலம்! - பல லட்சம் லிட்டர் தண்ணீர்

திருச்சி: மணப்பாறை அருகே கூட்டுக்குடிநீர் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் கால்வாயில் ஆறாக ஓடி வீணானது.

காவிரி கூட்டு குடிநீர் குழாய்
author img

By

Published : Sep 15, 2019, 5:37 PM IST

கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து துவரங்குறிச்சிக்கு சுமார் 3 அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி பிரிவு சாலை பகுதி வழியாக செல்லும் இந்தக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் கால்வாயில் ஓடி வீணானது.

இதனால் மணப்பாறை, துவரங்குறிச்சி, பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் நிலவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழாய் பொருத்தப்பட்டு பல வருடங்களை கடந்துவிட்டதால், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால் வீணாகும் தண்ணீர்

Intro:கூட்டு குடிநீர் திட்டக் குழாயில் திடீர் உடைப்பு - அடிக்கடி நிகழும் அவலம்.Body:கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து துவரங்குறிச்சி வரை காவிரி கூட்டு குடிநீர் சுமார் 3 அடி விட்டம் கொண்ட குழாய் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை வழியாக செல்லும் இந்த குழாய் கலிங்கப் பட்டி பிரிவு சாலை பகுதியில் இன்று திடீரென குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பீச்சியடித்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக, குழாயில் குடிநீர் செல்லுகின்ற அழுத்ததின் காரணமாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியது.
குழாய் உடைப்பை சரி செய்ய ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் மணப்பாறை,துவரங்குறிச்சி வரையிலான கிராமப்பகுதிக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீருக்கே தட்டுப்பாடு உள்ள மணப்பாறை பகுதியில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகியுள்ள இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயின் ஆயுட் காலாவதியானதால் அடிக்கடி இவ்வாறு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.