ETV Bharat / state

பள்ளிகல்வித்துறை அமைச்சர் தொகுதியில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஆதி திராவிடர் பள்ளி

திருச்சி திருவெறும்பூரில் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் மாணவர்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர்.

அடிப்படை வசதிகளற்ற ஆதி திராவிடர் பள்ளி
அடிப்படை வசதிகளற்ற ஆதி திராவிடர் பள்ளி
author img

By

Published : Jun 16, 2023, 10:51 AM IST

அடிப்படை வசதிகளற்ற ஆதி திராவிடர் பள்ளி

திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆதி திராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகளாக ஆறு பள்ளிகளை தரம் உயர்த்த உள்ள நிலையில், அதில் ஒன்றான இந்தப் பள்ளியில், பல மாதங்களாக பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தும், முன்பக்க நுழைவாயில் கதவு உடைந்த நிலையிலும் கிடப்பதால், பள்ளியின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது.

மேலும், மாணவர்களுக்கான கழிப்பிடம் நீரின்றி இருப்பதால், உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், அந்தக் கழிப்பிடத்தை சிலர் மது அருந்தவும் மற்றும் பல தவறான செயல்களுக்காக மாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், பள்ளியில் உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை.

இந்த கடும் வெயில் காலங்களில் மாணவர்கள் அதிக அளவில் நீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். ஆனால், பள்ளியில் குடிநீர் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கோடை விடுமுறையிலேயே இந்த பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்திருக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியான திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள இந்த ஆதி திராவிட பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளின் மெத்தன போக்கால், மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த பள்ளியின் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது குறித்து‌ பள்ளி மேலாண்மை குழுவைச் சார்ந்த கீர்த்தி மான்சிங் கூறுகையில், “பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாதததால், மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

மார்டன் பள்ளியாக அறிவித்த போதிலும் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதியும் செய்யவில்லை. தண்ணீர் குழாய்களை வெளி ஆட்கள் சேதப்படுத்தும் நிலை உள்ளது. அதனால், மாணவர் சேர்க்கை குறையும். புதிதாக மாணவர் சேர்க்கை இல்லாததால் பள்ளியின் வளர்ச்சி பாதிக்கும்” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து செல்வதை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால்‌ வெளி ஆட்களுடன் பழகி‌ பள்ளி மாணவர்கள் கெட்டுப்போகும் சூழல் ஏற்பட்டு உள்ளது” என்றார்.

அதேநேரம், திருச்சியின் முக்கியமான பகுதியாகவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் தொகுதியாகவும் உள்ள திருவெறும்பூரில் உள்ள பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சி முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீர் - மலர்த்தூவி வரவேற்ற விவசாயிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.