திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அக்ஷயா அகாதெமி பள்ளியிலிருந்து 22 பேர் 2019-2020ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஒட்டன்சத்திரம் கிராமப் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி 643 மதிப்பெண் பெற்று மாநில அளவில் ஐந்தாமிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியில் வைத்து பெரிய கேக் வெட்டி பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
பின்னர் மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்த மாணவி பிரியங்கா செய்தியாளர்களை சந்தித்துக் கூறுகையில், "எனக்கு பள்ளியில் நீட் தேர்வுக்கென தனியான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இந்த தேர்வுக்காக பெற்றோர் என்னை மிகவும் ஊக்குவித்தனர். நீட் தேர்வு எழுத சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் அமைத்தால் தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பதற்றம் இருக்காது" என தெரிவித்தார்.