திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் லலிதா(19) தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. லலிதா 12ம் வகுப்புவரை தமிழ் வழியில் கல்வி பயின்றவர். ஆன்லைன் வகுப்புகள் புரியவில்லை என்று பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி லலிதா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் தகவலறிந்த பாலக்கரை காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.