ETV Bharat / state

திருச்சி மலைக்கோட்டையில் நாளை தேரோட்டம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தேரோட்டம் நாளை (மே 13) நடைபெறுகிறது.

திருச்சி மலைக்கோட்டை தேர்த்திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

author img

By

Published : May 12, 2022, 12:12 PM IST

திருச்சி : தென் கைலாயம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறம். இக்கோயிலில் சுவாமி அம்பாளுக்கென தனித்தனித் தேர்கள் உள்ளது. இவை இரண்டும் ஒரே நாளில் அடுத்தடுத்து வடம் பிடிக்கப்பட்டு கிரிவலப்பாதையில் வலம் வரும்.

இந்தாண்டுக்கான சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பகலில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள், இரவு சுவாமி அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (மே 13) காலை நடைபெறவுள்ளது. இதற்காக நாளை அதிகாலை 4 மணிக்கு உற்சவ மூர்த்திகள் மலையிலிருந்து புறப்பட்டு, கீழே ஆண்டார் வீதியில் உள்ள தேர் மண்டபத்தில் எழுந்தருள்வார்.

இவ்வாறு உற்சவ மூர்த்திகள் தேர்களில் எழுந்தருளியபின் 6 மணிக்கு மேஷ லக்னத்தில், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். இந்த தேரோட்டம் நகரின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் நடப்பதால், தேரோட்ட நேரத்தின்போது அப்பகுதியில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதேநேரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல்துறையினரும் கோவில் நிர்வாகமும் விழாவிற்கு வேண்டிய வசதிகளை பக்தர்களுக்கு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயில் சார்பாக ரூ.23 கோடியில் தங்கும் விடுதி - ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.