ETV Bharat / state

வாக்களிக்காதவர்கள் வருந்தும் அளவிற்கு செயல்பட வேண்டும் - மு.க. ஸ்டாலின் அறிவுரை !

திருச்சி : வாக்களித்த மக்கள் வருந்தாத அளவிற்கும், வாக்களிக்காதவர்கள் தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தும் அளவிற்கும் நீங்கள் உழைக்க வேண்டும் என திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.

Stalin advised local body representatives in trichy
திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை
author img

By

Published : Jan 31, 2020, 9:39 PM IST

திருச்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் ராம்ஜிநகர் அருகேயுள்ள கேர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டினை திமுக துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகளிடம் மக்கள், திமுக, நானும் எதை விரும்புகிறோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காகதான் இந்த மாநாடு நடைபெறுகிறது. திமுக சார்பில் வெற்றி பெற்ற 6522 பேரும், சுயேச்சையாக போட்டியிட்டு திமுகவில் இணைந்தவர்கள் உள்பட என் மொத்தம் 6 ஆயிரத்து 679 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டின் சரி பாதி இடங்களை வெற்றி பெற்றவர்கள் இங்கு திரண்டு உள்ளனர்.

திருச்சிக்கு என்று பல வரலாறுகள், சிறப்பும் உண்டு. திருச்சி என்பது தமிழகத்தின் மையப்பகுதி மட்டும் கிடையாது. திமுகவிற்கும் மையப் பகுதி ஆகும். பல திருப்புமுனைகளை நாமும் தமிழ்நாடும் கண்ட இந்த திருச்சி மாவட்டம். கருத்து கேட்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறிய நிலைமாறி தற்போது மாநாடாக மாறியுள்ளது.

மாநாடு ஒன்று தனியாக நடத்தலாம் என்றும் இருந்தோம். ஆனால் திருச்சி மாவட்ட செயலாளர் கே.என்.நேரு வேகமாக செயலற்றி இதை மாநாடாகவே நடத்திவிட்டார். தற்போது அவர் முதன்மைச் செயலாளராக பதவி ஏற்று இருப்பதால் சற்று அமைதியாக காணப்படுகிறார். பல மாநாடுகளை நடத்திக் காட்டி சாதனை படைத்துள்ளார்.

திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை

நேற்று பெற்ற வெற்றியை விட நாளை பெறப்போகும் வெற்றியை நினைத்து தான் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆட்சியில் உள்ளவர்களின் அத்துமீறல், அக்கிரமம், பணபலம், காவல்துறை தலையீடு ஆகியவற்றை மீறித்தான் நீங்கள் இந்த வெற்றியைப் பெற்று உள்ளீர்கள். தேர்தல் ஆணையமும் அதிமுகவின் தலைமை அலுவலகமாகச் செயல்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. ஆனால் தற்போது எதிர்கட்சியாக உள்ள திமுக ஆளும் கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் கோபம் என்பதைவிட, நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், விருப்பத்தையும் தான் காட்டுகிறது.

மக்களின் கஷ்டத்தை தீர்ப்பதற்கு திமுக மட்டுமே என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வந்துள்ளது. இந்த பெயரை நாம் காப்பாற்றியாக வேண்டும். 1996 ஆம் ஆண்டில் சென்னை மேயராக பதவியேற்றபோது, நான் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். நான் அதை இங்கு சொல்கிறேன். வாக்களித்த மக்கள் வருந்தாத அளவிலும், வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்க தவறிவிட்டோம் என்று வருந்தும் வகையிலும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு இருக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள் . நமக்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என்று வருத்தப்படும் சூழ்நிலையை உருவாக்கிவிடக் கூடாது.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றை களைய வேண்டும். தற்போது வெற்றி பெற்று உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அவரவர் பகுதியில் சிறப்பாக செயல்பட்டால் அந்த பகுதியை திமுகவின் கோட்டையாக மாற்ற முடியும். குறிப்பாக டெண்டர் பிரச்சினையில் தான் நமக்கு கெட்ட பெயர் வரும். அதனால் முழு கவனமும் அதில் செலுத்தப்பட வேண்டும். சட்ட விரோத செயல்களையும், ஊழல்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது, முறைகேட்டில் ஈடுபடக்கூடாது. வெளிப்படைத்தன்மை இருந்தால் நாம் தலைநிமிர்ந்து இருக்க முடியும்.

Stalin advised local body representatives in trichy
திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை

நமது பணி சிறப்பாக இருந்தால் தான் 2021 நமது ஆட்சி வரும். அப்படி செயலாற்றினால் தான் அடுத்தத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவது நிறைவேறும். இதற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பரப்புரை முக்கியமானதாகும். இந்த பரப்புரை அமைதியான முறையில் நடக்கப்போகிறது. அதன் பணி இங்கிருந்து தொடங்க உள்ளது.

திமுகவிற்கு நற்பெயரை ஈட்டித் கொடுத்து எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை தேடித் தரவேண்டும். திமுக பிரதிநிதிகள் ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள். பங்கு தருகிறேன் என்று கூறி ஏமாற்றி விடுவார்கள். அடுத்த ஓராண்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி கொடுக்கப்படும். திமுக ஆட்சியில் அமர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதை நிறைவேற்றி தருவீர்களா?. நமது வெற்றியை தாங்க முடியாமல் ஆளுங்கட்சியினர் நெருக்கடி தருவார்கள். ஆனால் அதையும் மீறி செயல்பட வேண்டும் என்றார்.

இந்த மாநாட்டில் மேலும் திமுக கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க : கனிமொழி தேர்தல் வெற்றி வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

Intro:ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள் என்று திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை கூறினார்.Body:திருச்சி: ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள் என்று திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகே கேர் பொறியியல் கல்லூரியில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நடைபெற்றது.
மாநாட்டிற்கு தலைமை வகித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்,
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக பிரதிநிதிகளிடம் மக்கள், திமுக, நானும் எதை விரும்புகிறோம், இதை எதிர்பார்க்கிறோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காக தான் இந்த மாநாடு நடைபெறுகிறது. திமுக சார்பில் வெற்றி பெற்ற 6522 பேரும், சுயேச்சையாக போட்டியிட்டு திமுகவில் இணைந்தவர்கள் உள்பட என் மொத்தம் 6 ஆயிரத்து 679 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளனர்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தின் சரி பாதி இடங்களை வெற்றி பெற்றவர்கள் இங்கு திரண்டு உள்ளனர்.
திருச்சிக்கு என்று பல வரலாறுகள், சிறப்பும் உண்டு. பல திருப்பு முனைகளை கண்ட மாவட்டம் திருச்சி. கருத்து கேட்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறிய நிலை மாறி தற்போது மாநாடாக மாறியுள்ளது.
மாநாடு ஒன்று தனியாக நடத்தலாம் என்றும் இருந்தோம். ஆனால் திருச்சி மாவட்ட செயலாளர் கே என் நேரு வேகமாக செயல்பட்டு இதை மாநாடாக மாற்றிவிட்டார். தற்போது அவர் முதன்மைச் செயலாளராக பதவி ஏற்று இருப்பதால் சற்று அமைதியாக காணப்படுகிறார். பல மாநாடுகளை நடத்திக் காட்டி சாதனை படைத்துள்ளார்.
திருச்சி என்பது தமிழகத்தின் மையப்பகுதி மட்டும் கிடையாது. திமுகவிற்கும் மையப் பகுதி ஆகும். நேற்று பெற்ற வெற்றியை விட நாளை பெறப்போகும் வெற்றியை நினைத்து தான் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். ஆட்சியில் உள்ளவர்களின் அத்துமீறல், அக்கிரமம், பணபலம், காவல்துறை தலையீடு ஆகியவற்றை மீறித்தான் நீங்கள் இந்த வெற்றியை பெற்று உள்ளீர்கள். தேர்தல் ஆணையமும் அதிமுகவின் தலைமை அலுவலகமாக செயல்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. ஆனால் தற்போது எதிர்கட்சியாக உள்ள திமுக ஆளும் கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது ஆளும் கட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் கோபம் என்பதைவிட, நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், விருப்பத்தையும் தான் காட்டுகிறது.
மக்களின் கஷ்டத்தை தீர்ப்பதற்கு திமுக மட்டுமே என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வந்துள்ளது. இந்த பெயரை நாம் காப்பாற்றியாக வேண்டும். வாக்களித்த மக்கள் வருந்தாத அளவிலும், வாக்களிக்காத மக்கள் ஏன் வாக்களிக்க தவறிவிட்டோம் என்று வருந்தும் வகையிலும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளின் செயல்பாடு இருக்க வேண்டும்.
நமக்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என்று வருத்தப்படும் சூழ்நிலையை உருவாக்கி விட கூடாது. மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை களைய வேண்டும். தற்போது வெற்றி பெற்று உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் அவரவர் பகுதியில் சிறப்பாக செயல்பட்டால் அந்த பகுதியை திமுகவின் கோட்டையாக மாற்ற முடியும். குறிப்பாக டெண்டர் பிரச்சினையில் தான் நமக்கு கெட்ட பெயர் வரும். அதனால் முழு கவனமும் அதில் செலுத்தப்பட வேண்டும். சட்ட விரோத செயல்களையும், ஊழல்களுக்கும் இடம் கொடுக்கக்கூடாது.. முறைகேட்டில் ஈடுபடக்கூடாது. வெளிப்படைத்தன்மை இருந்தால் நாம் தலைநிமிர்ந்து இருக்க முடியும். அப்படி இருந்தால் தான் அடுத்து நான் முதல்வராவதும், திமுக ஆட்சிக்கு வருவதும் நிறைவேறும். நமது பணி சிறப்பாக இருந்தால்தான் 2021 நமது ஆட்சி வரும். இதற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளின் பிரச்சார முக்கியமானதாகும். அமைதியான பிரச்சாரம் நடக்கப்போகிறது. அதன் பணி இங்கிருந்து தொடங்கவேண்டும். திமுகவிற்கு நற்பெயரை ஈட்டித் கொடுத்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தேடித் தரவேண்டும். திமுக பிரதிநிதிகள் ஆளுங்கட்சியினருடன் கைகோர்த்து விடாதீர்கள். பங்கு தருகிறேன் என்று கூறி ஏமாற்றி விடுவார்கள். அடுத்த ஓராண்டில் திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி கொடுக்கப்படும். திமுக ஆட்சியில் அமர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதை நிறைவேற்றி தருவீர்களா?. நமது வெற்றியை தாங்க முடியாமல் ஆளுங்கட்சியினர் நெருக்கடி தருவார்கள். ஆனால் அதையும் மீறி செயல்பட வேண்டும் என்றார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.