உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு 21 நாள்கள் அமலில் உள்ளது.
மேலும், மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டு மக்களை காக்க தன்வந்திரி யாகம் இன்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்திருந்தார். இந்நிகழ்வில் கோயில் அலுவலர்களும் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: காட்டுத்தீயில் பெண் குழந்தைகள் இருவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு!