திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் நம்பெருமான் உத்திர வீதிகளில் வீதி உலா நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான நேற்று காலை, இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர், மாலை தங்க கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது.
இந்நிலையில் இன்று காலை, உற்சவர் நம்பெருமாள், தங்க சேஷ வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், மாலையில் ஹனுமந்த வாகனத்தில் வீதி உலா நடைபெறவுள்ளது.