திருச்சியில் திருவிழா இல்லாத நாளே கிடையாது, அரங்கன் சந்நிதியில். 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில், தைமாசி தெப்பத்திருவிழா கடந்த 4ஆம் தேதி தொடங்கி வருகிற 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தெப்பத்திருவிழாவின் முதல் நாள் ஹம்ச வாகனத்திலும், இரண்டாம் நாள் ஹனுமந்த வாகனத்திலும், மூன்றாம் நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், நான்காம் நாள் வெள்ளி கருட வாகனத்திலும், ஐந்தாம் நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், ஆறாம்நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தெப்பத்திருவிழா
தெப்பத்திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (பிப்.10) மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
நாளை (பிப்.11) மாலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகளோடு இணைந்து காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரசவ வார்டுகளில் போதுமான மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் - மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!