ETV Bharat / state

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடக்கம்

திருச்சி: முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்.

sports
sports
author img

By

Published : Feb 17, 2020, 5:18 PM IST

தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, 2019–2020ஆம் ஆண்டுக்கான, மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் திருச்சி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் 2019-2020ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. இப்போட்டியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடக்கம்

இதில், கூடைப்பந்து, கைப்பந்து, வளைகோல் பந்து, கபடி, இறகு பந்து, டென்னிஸ், ஜூடோ, குத்துச்சண்டை, நீச்சல் மற்றும் தடகள போட்டிகள் இன்று தொடங்கின. இந்த மாவட்ட அளவிலான போட்டிகள் 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெறுகிறது. 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தினர்.

இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதலமைச்சர் கோப்பை: 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.