ETV Bharat / state

வரலாற்றுப் புகழ்பெற்ற பாண்டுரு காதி அஞ்சல் உறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி! - ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமம்

திருச்சி: காந்தியடிகளால் வரலாற்றுப் புகழ்பெற்ற, பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Special Event on the Historic Panduru Khadi Mail Envelope in trichy
வரலாற்று புகழ்பெற்ற பாண்டுரு காதி அஞ்சல் உறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி!
author img

By

Published : Feb 3, 2020, 10:27 PM IST

Updated : Feb 3, 2020, 10:43 PM IST

திருச்சி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிக்கு, அதன் செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஜலால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் பேசுகையில், 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் நாயகனாகத் திகழ்ந்த மகாத்மா காந்தியடிகளால் தான் ராட்டை புகழ்பெற்றது.

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய காந்தி கையில் எடுத்த முதல் ஆயுதமே நூல் நூற்கும் இந்த ராட்டை என்பது வரலாற்றின் வியப்பாகும். இந்தியாவில் உள்ள விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பஞ்சை, மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்த ஆங்கிலேயர் அவற்றை இங்கிலாந்து நாட்டிற்குக் கப்பல் மூலம் கொண்டு சென்றனர். பின்னர், அதையே துணிகளாகத் தயாரித்து மிக அதிக விலைக்கு இந்தியாவில் இருந்த ஏழை, எளிய மக்களிடம் விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடைந்தனர்.

இதனைக் கண்ட காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக கிராமியப் பொருளாதாரப் போரை தொடுக்க நினைத்தார். அதற்கான ஆயுதமாக தன்னிறைவடைந்த கிராமியப் பொருளாதாரத்தின் சின்னமாக விளங்கிய ராட்டையையும் காதியையும் கண்டார். அந்த ஆயுதத்தை அவர் முதல்முறையாக கண்ட இடம் தான், ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமம்.

1920ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் நாடு முழுவதும் பயணம் செய்தபோது, ​​ ஆந்திரப் பிரதேசத்தை அடுத்துள்ள துசி ரயில் நிலையம் அருகில், ரயில் நின்றுகொண்டிருந்த சமயத்தில் கைவினை கலைஞர்கள் சிலர் காந்தியை சந்திக்கின்றனர். அப்போது அவர்கள் ஒரு அன்பளிப்பைத் தருகிறார்கள். அதைக் கண்ட காந்தி திகைத்தார். காந்தி அதிசயித்த அந்த அன்பளிப்பு தான் காதி. அதன் நேர்த்தியைக் கண்டு, காந்தி ஆச்சரியம் அடைந்தார். அதன் பின்னர் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமத்திற்கு காந்தி செல்கிறார். 'ஸ்வராஜ்ஜியத்தின் காதி' உற்பத்தியைப் பற்றி அறிந்து கொள்கிறார். ராட்டையைக் கொண்டு நூல் தயாரிக்கும் பணியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கிறார்.

இதில் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. அவர் தனது மகன் தேவதாஸை பாண்டுருவுக்கு அனுப்பி அங்கேயே தங்கி இருந்து, ராட்டையைக் கற்கச் செய்கிறார். தான் சுழற்றியதை அணிந்திருப்பதாக அறியப்படும் காந்தி, பாண்டுருவிலிருந்து வந்த தோதிகளை விரும்பியதாகக் கூறப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது' என்றார்.

நிகழ்வின் இறுதியில் பொருளாளர் தாமோதரன் நன்றி கூறினார்.

Special Event on the Historic Panduru Khadi Mail Envelope in trichy
வரலாற்றுப் புகழ்பெற்ற பாண்டுரு காதி அஞ்சல் உறை குறித்த சிறப்பு நிகழ்ச்சி!

இன்றும் பாண்டுரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வயதான மற்றும் நடுத்தர வயது பெண்கள் வீட்டில் உட்கார்ந்து, ராட்டையைக் கொண்டு, நூல் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க : விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு - தனியார் கல்லூரி பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை

Intro:அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.Body:திருச்சி:
அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம் சார்பில் பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சி அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க
செயலர் விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர் , ஜலால், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜேந்திரன் ஆந்திரா பாண்டுரு காதி சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசுகையில்,
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாண்டுரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காந்தி சர்காவுடன் வயதான மற்றும் நடுத்தர வயது பெண்கள் வீட்டில் உட்கார்ந்து, சர்காவைக் கொண்டு நூல் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காதி உற்பத்தியைப் பற்றி அறிந்தவர்கள் , தங்கள் வர்த்தகத்தில் பொறுமையாக உழைக்க வேண்டும். 'ஸ்வராஜின் நூலை' சுழற்றும்போது பொறுமை காக்க வேண்டும்
1920 களின் முற்பகுதியில் நாடு முழுவதும் பயணம் செய்தபோது, ​​பாண்டுருவிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள துசி ரயில் நிலையத்தில் காந்தி நின்று கொண்டிருந்தார், இந்த கிராமத்தில் காதி சுழற்றப்படுவதைக் கண்டு, இப்பகுதியின் கைவினைஞர்களால் செய்யப்பட்ட காதியின் நேர்த்தியைக் கண்டு காந்தி ஆச்சரியப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது மகன் தேவதாஸை பாண்டுருவுக்கு அனுப்பினார். ஒரு வாரம் தங்கியபின், பிராந்தியத்தில் பெண்கள் எப்படி சுழற்றுகிறார்கள், ஒற்றை சுழல் சர்காவில், கையால் செய்யப்பட்ட மிகச்சிறந்த காதி என்று அறியப்பட்டதை அவர் காந்திக்கு தெரிவித்தார். தான் சுழன்றதை அணிந்திருப்பதாக அறியப்படும் காந்தி, பாண்டுருவிலிருந்து வந்த தோதிகளை விரும்பியதாகக் கூறப்படுகிறது என்றார். முன்னதாக துணைச்செயலர் மகாராஜன் வரவேற்றார். பொருளாளர் தாமோதரன் நன்றிக் கூறினார்.Conclusion:
Last Updated : Feb 3, 2020, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.