ETV Bharat / state

வரும் 27ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம்: தென் மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம் ஆதரவு - lorry Strike in trichy

திருச்சி: டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் நலச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தென் மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம்

author img

By

Published : Dec 21, 2020, 7:13 PM IST

தென்மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் நலச்சங்கம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம், திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு தலைவர் கோபால் நாயுடு தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சண்முகப்பா, ஆலோசகர் சுந்தர்ராஜ், மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் குமாரசாமி, துணைத்தலைவர் வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  • வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவு

சுமார் 80 கிமீ., வேகத்திற்கு மிகாமல் இயங்கும் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த உத்தரவு இதர மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தும் உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

  • பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்

மத்திய அரசின் அறிவிப்பின் படி, நல்ல பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் சில மாநிலங்கள் சில வியாபாரிகளிடம் அந்த ஸ்டிக்கரை மீண்டும் வாங்க வற்புறுத்துகிறார்கள். இதனால் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது. இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.

  • ஜிபிஎஸ் கருவி

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு உற்பத்தியாளர்களே ஜிபிஎஸ் கருவி பொருத்தி விடுகிறார்கள். இந்த வாகனங்களுக்கு புதியதாக ஜிபிஎஸ் பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

  • டீசல் விலை குறைப்பு

கர்நாடகா, புதுச்சேரியில் டீசல் விலை குறைவாக உள்ளது. தமிழ்நாட்டிலும் வாட் வரியை குறைத்து டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • வாகன தகுதிச் சான்று (எஃப்.சி)

மாநிலத்தில் உள்ள எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றாலும் வாகனத்தை ஆய்வு செய்து தகுதி சான்றிதழ் வழங்க வேண்டும்.

  • சோதனை சாவடியில் லஞ்சம்

மாநில எல்லையில் உள்ள வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியை கடப்பதற்கு 200 முதல் 500 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. குஜராத் மற்றும் ஒடிசா மாநிலம் போல தமிழ்நாட்டிலும் சோதனை சாவடிகளை அகற்ற வேண்டும்.

  • தற்காலிக வாகன தகுதிச் சான்று

புதிய வாகனங்களுக்கு பாடி கட்டுவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆவதால், தற்காலிக தகுதிச் சான்று ஒரு மாத காலத்தில் இருந்து மூன்று மாத காலம் வரை வழங்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 27ஆம் தேதி காலை முதல் அனைத்து வாகனங்களையும் இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வரும் 27ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தென்மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட்டர்ஸ் நலச் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.