திருச்சி: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் வித்தியாசமான வடிவில் கேக் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பேக்கரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தினாலான கேக் தயார் செய்யப்பட்டுள்ளது.
6 அடி உயரமும் 90 கிலோ எடையும் கொண்ட இந்த பிரமாண்டமான கேக் தான் தற்போது டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த கேக்கை 90 கிலோ சர்க்கரை மற்றும் 80 முட்டை கலந்த கலவையால் 24 மணி நேரத்தில், 4 பேர் கொண்ட குழுவினர் தயாரித்துள்ளனர்.
இந்த கேக் இரண்டு நாட்கள் பேக்கரியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முதலமைச்சர் வடிவில் வைக்கப்பட்டுள்ள கேக் முன்பு, கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: சில்க் பிறந்த நாள் - கேக் வெட்டி, 50 பேருக்கு புத்தாடை வழங்கிய மகா ரசிகர்