சர்வதேச இளைஞர் மேம்பாட்டு பயிற்சி இயக்கமாகத்திகழும் தனியார் அமைப்பு சார்பில் நரிக்குறவர் சுயமுன்னேற்றப் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது.
திருச்சி பாரதியார் சாலையில், உள்ள ராணா கூட்ட அரங்கில் நடைபெற்ற, இந்தப் பயிற்சிப்பட்டறையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
சுயதொழில் பயிற்சிப் பட்டறை
கரோனா பெருந்தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்திற்கு மாற்று வழி, பொருளாதார மேம்பாடு அளிக்கும் வகையில் இந்தப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அந்த தனியார் அமைப்பின் தலைவர் தீபா விஜயகுமார் தலைமை வகித்தார்.
சுயதொழில் பயிற்சிப் பட்டறை ஏற்பாடு
திருச்சி தனியார் அமைப்பைச் சார்ந்த தலைவரும், தனியார் தொண்டு நிறுவன செயல் இயக்குநர் ராணா ராஜாவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
நரிக்குறவர்களுக்கான மாற்று சிந்தனை, மாற்றங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு முதல் கட்டமாக திருச்சி மாவட்டம், தேவராய நெரிப்பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில், தனியார் அமைப்பினரின் அனைத்து நரிக்குறவர் மேம்பாட்டு சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நரிக்குறவர் பெண்களிடம் போதையில் சில்மிஷம் செய்த காவலர்!