திருச்சி மாவட்டம், மணப்பாறை, அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் கள்ளச் சாராயம் விற்பனை நடைபெறுவதாக காவல் துறையிருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் பால்சுடரின் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் என்.அன்பழகன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வளநாடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வெள்ளியங்குடி பகுதியில் மூன்று பேரல்களில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் சாராய ஊறல்களையும், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருமலையான்பட்டியில் குடங்களில் இருந்த 30 லிட்டர் ஊறல்களும் கண்டறியப்பட்டன.
தொடர்ந்து வையம்பட்டி சரகத்திற்குள்பட்ட கூடத்திப்பட்டியில் ஐந்து லிட்டர் ஊறல்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகம்: கணவன் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி!