திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 74ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மணப்பாறை காவல் துறை கண்காணிப்பாளர் பிருந்தா, வட்டாட்சியர் தமிழ் கனி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு அண்ணாதுரை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் சமுத்திரம் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரசுப்பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, பணமுடிப்பை மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா அணிவித்து கௌரவித்தார்.
![ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07:19:50:1597499390_tn-tri-02-thousand-free-saplings-at-independence-day-celebrations-image-script-tn10020_15082020185302_1508f_1597497782_974.jpg)
மேலும், இந்த ஆண்டு பொதுத் தேர்வில் 465 மதிப்பெண்கள் பெற்ற அப்பள்ளி மாணவன் விக்ரம் இந்தியக் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும், வாழ்த்துகளையும் பிருந்தா தெரிவித்தார். இதனையடுத்து விழாவின் இறுதியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 1000 மரக்கன்றுகளை அப்பகுதி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.