ETV Bharat / state

ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு அனுப்பிய மாணவ - மாணவிகள்

திருச்சி : ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தபால் மூலம் ராக்கி கயிறுகளை அனுப்பினர்.

rakshabandan
author img

By

Published : Aug 15, 2019, 8:35 AM IST

நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டியும், பரிசுகள் வழங்கியும் பாசத்தை வெளிப்படுத்துவார்கள்.

அந்த வகையில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கென்று, இந்திய தபால் துறை ராக்கி தபால் உறைகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ராக்கி கயிறுகளை பொதுமக்கள், ராணுவ வீரர்களுக்கு தபால் மூலம் அனுப்ப முடியும். இது அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ராக்கி கயிறு அனுப்பிய மாணவர்கள்

இதைப் பயன்படுத்தி தபால் துறையின் மூலம் ராக்கி கயிறு அனுப்பும் நிகழ்ச்சி, திருச்சியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறை தபால் துறை மூலம் அனுப்பி வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

Intro:ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பள்ளி மாணவ-மாணவிகள் தபால் மூலம் ராக்கி கயிறுகளை அனுப்பினர்.

Body:குறிப்பு: இதற்கான புகைப்படங்கள் wrap மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

திருச்சி: ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு திருச்சி வாசவி வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் தபால் மூலம் ராக்கி கயிறுகளை அனுப்பினர்.
நாடு முழுவதும் ரக்ஷ பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு சகோதரத்துவத்தை வளர்க்கும் வகையில் ஆண்களுக்கு பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்வார்கள். இதன்மூலம் சம்பந்தப்பட்ட ஆணை தனது சகோதரனாக அந்த பெண்மணி ஏற்றுக்கொள்வதாக அறியப்படுகிறது.
இந்த வகையில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு என்று இந்திய தபால் துறை ராக்கி தபால் உறைகளை அறிமுகம் செய்துள்ளது. இது அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் ராக்கி கயிறுகளை பொதுமக்களும் ராணுவ வீரர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க முடியும். இந்த வகையில் திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளி மாணவ-மாணவிகள் 100 பேர் ராக்கி அஞ்சல் உறை மூலம் ராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறுகளை இன்று அனுப்பினர்.
இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் கணபதி, வாசவி வித்யாலயா பள்ளி துணைத் தலைவர் மாதவ மனோகரன், முதல்வர் பாவை மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி: மாதவ மனோகரன்
வாசவி வித்யாலயா பள்ளி துணை தலைவர்.

Conclusion:ரக்ஷபந்தன் சிறப்பு தபால் உறை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.