ETV Bharat / state

'மழையால் பள்ளி பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது' - அமைச்சர் அன்பில் மகேஷ் - விழியிழந்த மகளிர் மறுவாழ்வு மையத்தில் நலத்திட்ட உதவிகனை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் மழையின் காரணமாக இனியும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படாது எனப் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ்
author img

By

Published : Nov 28, 2021, 3:09 PM IST

திருச்சி: திமுக இளைஞர் அணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (நவ.28) திருச்சி மன்னார்புரத்தில் உள்ள விழியிழந்த மகளிர் மறுவாழ்வு மையத்தில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், இனியும் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க வேண்டிய அவசியமில்லை. மழை பாதிப்பு குறைந்த பின்பு பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் முடிக்கப்படும்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

தனியார் பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறைதான். இந்த நடைமுறையே தொடரும்" என்று தெரிவித்தார்.

விவசாயிக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர்

கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவெறும்பூர் பகுதியில் மழை பாதிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்த போது விவசாயி ஒருவரை அவமரியாதையாக பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "மக்களிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்த போது அவர் தன்னுடைய வயலை தனியாக வந்து பாருங்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். அந்த நேரத்தில்தான் நான் அவ்வாறு பேசினேன். அது வருந்தத்தக்கது தான். நான் அவ்வாறு பேசியிருக்க கூடாது.

அந்த விவசாயின் நிலம் 5 ஏக்கர் உள்பட 80 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் பெற்று தர வேண்டியது அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் என்கிற முறையில் அது என் கடமை. அதை நான் செய்வேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி: 6 மாவட்டங்களில் கனமழை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.