திருச்சி: மணப்பாறை அடுத்த கண்ணூத்து அணையில் அரசு அனுமதியின்றி இரவு நேரத்தில் மணல் அள்ளுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காவல் துறையினர் அங்கு மணல் எடுப்பதற்காக ஜேசிபி இயந்திரங்களுடன் வந்தோரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கண்ணூத்து சின்னையா மகன் முருகேசன் (34), ராமசந்திரன் மகன் சிவசக்தி (18), மோகன்சுந்தரம் மகன் ராஜ்மோகன் (28), கல்லம்பட்டி இளங்கோவன் மகன் தினேஷ் (21), சிலம்பம்பட்டி பழனிச்சாமி மகன் பிரபாகரன் (24) ஆகியோர் என்பது தெரிய வந்தது. பின்னர் அவர்களிடமிருந்து இரண்டு ஜேசிபி இயந்திரங்கள், ஒரு இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
இதையும் படிங்க: ஊரடங்கில் ட்ரக்கிங்... கொடைக்கானலில் சுற்றிவளைத்த காவல் துறை!