ETV Bharat / state

கரோனா: அரசு மருத்துவமனைக்கு மனித ரோபோக்கள் வழங்கிய மென்பொருள் நிறுவனம்

author img

By

Published : Mar 30, 2020, 9:04 AM IST

திருச்சி: அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவும் விதமாக தனியார் மென்பொருள் நிறுவனம் ரோபோக்களை வழங்கியுள்ளது.

robots-provided-for-corona-victims-in-trichy-hospital
robots-provided-for-corona-victims-in-trichy-hospitalமாத்திரை

அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு ரோபோ மூலம் மருந்து, மாத்திரை, உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கும்வகையில் பாதிப்பிற்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவருகின்றனர்.

இவர்களுக்காக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளும் உருவாக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிலர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீட்டிலேயே சுகாதாரத் துறை பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருந்துப் பொருள்கள் வழங்க புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்று மருத்துவமனைக்கு ஜாபி என்னும் ரோபோக்களை வழங்கியுள்ளது. செவிலியர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கும்போது அவர்களுக்கும் இந்தத் தொற்று பரவ வாய்ப்புள்ளதால், ரோபோக்கள் மூலம் நோயாளிகளை கவனிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.

கரோனா பாதிப்பாளர்களுக்காக வழங்கப்பட்ட ரோபோக்கள்

முதற்கட்டமாக, இந்த ரோபோக்கள் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உணவு, மருந்துப் பொருள்களை வழங்க பயன்படுத்தலாம் எனவும், வாய்ஸ் இன்ட்ராக்டிவ் தொழில்நுட்பம், மொபைல் மூலமாகவே ரோபோக்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

தற்போது, 9 ஜாபி வகை ரோபோவும் ஒரு ஜாபி மெடிக் ரோவர் வகையான ரோபோவும் தயார் நிலையில் உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ரோபோக்களின் பயன்பாட்டினை மாவட்ட ஆட்சியர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சோதனைசெய்தனர். விரைவில் இந்த ரோபோக்கள் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இதையும் படிங்க: கரோனா நோயாளிகளுக்கு உதவ கோவிட் ஃபைட்டர் ரோபோ அறிமுகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.