திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது கரும்புளிபட்டி. இங்கு முறையாக குடிநீர் வருவதில்லை என அப்பகுதி மக்கள் ஊராட்சி செயலரிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாகக் கூறியும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மறியல்
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தையும், ஊராட்சி செயலரையும் கண்டித்து இன்று காலை அவ்வழியே மணப்பாறை நோக்கி சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலைக் கைவிட்டனர்.
பின்னர் அங்கு வந்த ஊராட்சி செயலரை பொதுமக்கள் சுற்றிவளைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தத் திடீர் சாலை மறியலால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இருபது நாள்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் - பொது மக்கள் சாலை மறியல்!