ஓய்வுபெற்ற வங்கி ஓய்வூதியர்கள், பணி மூப்படைந்தோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தர்ணாவில், ஓய்வூதிய சட்ட விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் 100 விழுக்காடு பஞ்சப் படியை ஈடு செய்ய வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை 30 விழுக்காடாக உயர்த்த வேண்டும், ஊதிய திருத்தம் செய்யும்போது ஓய்வூதியத்தை திருத்தம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ காப்பீடு பிரீமியத்தை வங்கியே செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், அனைத்திந்திய வங்கி அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அசோக், ஊழியர் சங்க உதவிப் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கூட்டமைப்பின் தலைவர்கள் கணேசன், ஜவஹர் அலி, விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.