திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிந்த இரண்டு வயது குழந்தை சுஜித் 30 அடி ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தார். அவரை மீட்கும் பணியில் நாமக்கல் தீயணைப்புப் படையினருடன் இணைந்து மதுரை தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க தனித்துவமான கருவியை வடிவமைத்தவரான மணிகண்டன் மதுரையிலிருந்து சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.
தற்போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மணிகண்டன் கண்டுபிடித்த தனித்துவமான கருவி மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.